Saturday 4th of May 2024 06:17:11 PM GMT

LANGUAGE - TAMIL
-
புங்குடுதீவு பெண்ணை ஏற்றிவந்த பருதித்துறை பேருந்து நடத்துநருக்கு கொரோனா!

புங்குடுதீவு பெண்ணை ஏற்றிவந்த பருதித்துறை பேருந்து நடத்துநருக்கு கொரோனா!


கம்பஹா ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி புங்குடுதீவு திரும்பிய கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய பெண்ணை ஏற்றிவந்த பருதித்தித்துறை அரச பேருந்து நடத்துநருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டுமுறை மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையின் அடிப்படையிலேயே அவருடைய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவி இணையத்துக்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த நபரே தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பேருந்தில் பயணித்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு முறை பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்களில் நடத்துநர் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த நடத்துனர் கொழும்பில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை சேவையில் ஈடுபடும் WP ND 9776 என்ற இலக்கமுடைய பேருந்தில் பணியாற்றிவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE